இரண்டு மத்திய ரக போன்களை மக்கள் விரும்பும் வசதிகளுடன் விற்பனைக்கு எல்.ஜி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதலாவதாக கேண்டி பார் வடிவில் வந்துள்ள எல்.ஜி. ஜி.டபிள்யூ 300, பிளாக்பெரி தன் இ சீரிஸ் போன்களில் பிரபலப்படுத்திய கீ போர்டின் வடிவமைப்பிலான குவெர்ட்டி கீ போர்டைக் கொண்டுள்ளது. பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டு, எடை குறைவாக இருந்தாலும் மிக உறுதியாக உள்ளது. 2.4 அங்குல QVGA டிஸ்பிளே திரை தரப்பட்டுள்ளது. அறையின் உள்ளேயும் வெளியேயும் இதன் டிஸ்பிளேயை எளிதில் காண முடிகிறது. 16 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் மெமரியை அதிகப்படுத்த முடியும். போனின் பின்புறத்தில் 2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் ஆட்டோ போகஸ் மற்றும் பிளாஷ் இல்லை. ஆனால் அது ஒரு குறையாகத் தெரியவில்லை. இதன் மிகச் சிறந்த அம்சமாக , ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் தன்மையினைக் கூறலாம். ஒரு அப்ளிகேஷனை இயக்கிக் கொண்டிருக் கையிலேயே இன்னொரு அப்ளிகேஷனுக்கு மாறிக் கொள்ளலாம். பின் மீண்டும் பழைய அப்ளிகேஷனைத் தொடரலாம். அல்லது மெயின் மெனு செல்லலாம். ஆனால் இதில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்கான நேரடி இணைப்பு இல்லை. ஆனால் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற தள இணைப்புகளை டவுண்லோட் செய்து இயக்கலாம். இதில் உள்ள மியூசிக் பிளேயர் சிறப்பாக இயங்குகிறது. பலவகை பார்மட்டுகளில் உள்ள பாடல் பைல்களை இயக்குகிறது. ஹெட்போன்ஸ் வழியாக இசை ஒலி துல்லியமாக உள்ளது. எப்.எம். ரேடியோவும் சிறப்புடன் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள வெப் பிரவுசர், ஆப்பரா மினி அளவிற்கு வசதிகளுடன் இல்லாததால், நிச்சயம் அனைவரும் ஆப்பரா மினி பிரவுசரை டவுண்லோட் செய்து பயன்படுத்துவார்கள். இதன் விலை ரூ.4,800 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் இவ்வளவு வசதிகள் இருப்பதால், நிச்சயமாக மக்களிடையே நல்ல வரவேற்பை இந்த போன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய எல்.ஜி. போன் மாடல் ஜி.எக்ஸ். 300. இது இரண்டு சிம்களில் இயங்கக் கூடியது. இது ஒரு 3ஜி போன் அல்ல; நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 116 x 51 x 12.8 மிமீ என்ற அளவில் உள்ளது. இதன் 2.2 அங்குல திரை டி.எப்.டி. 176 x 220 என்ற பிக்ஸெல் அளவில் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆயிரம் முகவரிகளைத் தாங்கும் போன் அட்ரஸ் புக் தரப்பட்டுள்ளது. இதன் மெமரி 30 எம்.பி. இதனை 4 ஜிபி வரை நீட்டிக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. மூலம் டேட்டா பரிமாறிக் கொள்ளலாம். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இமெயில் வசதிகள் நன்றாக இயங்குகின்றன. இதில் 2 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் போட்டோக்கள் 1600 x 1200 பிக்ஸெல் திறனுடன் கிடைக்கிறது. இதில் உள்ள பேட்டரி திறனுடன் உள்ளது. ஆனால் இந்த அளவிலான மின் சக்தியைச் செலவழித்துப் பயன்படுத்தும் அளவிலான சாதன வசதி இல்லாததால், பேட்டரி உழைக்கும் நாள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கும் இந்த போன் கடைகளில் ரூ.4,950 என்ற அளவில் உள்ளது. இரண்டு சிம் பயன்பாட்டிற்காக மொபைல் போன் வாங்க விரும்புபவர்கள் இதனை வாங்குவது குறித்து சிந்திக்கலாம்.
* ஜாய் ஸ்டிக் வைத்து போனில் அதிக கேம்ஸ் விளையாடி னால், ஜாய் ஸ்டிக் விரைவில் கெட்டுப் போக வாய்ப் புண்டு. எனவே அழைப்புகள் இல்லாமல், அதிகம் இதனைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும்.
* சிம் எண், மொபைல் போன் தனி அடையாள எண், பெயர் மற்றும் எண்கள் ஆகியவற்றை ஏடு ஒன்றில் குறித்து வைக்கவும். அல்லது கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்திடவும்.
* ஜாய் ஸ்டிக் வைத்து போனில் அதிக கேம்ஸ் விளையாடி னால், ஜாய் ஸ்டிக் விரைவில் கெட்டுப் போக வாய்ப் புண்டு. எனவே அழைப்புகள் இல்லாமல், அதிகம் இதனைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும்.
* சிம் எண், மொபைல் போன் தனி அடையாள எண், பெயர் மற்றும் எண்கள் ஆகியவற்றை ஏடு ஒன்றில் குறித்து வைக்கவும். அல்லது கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்திடவும்.
No comments:
Post a Comment