Tuesday, November 16, 2010

ஐயப்ப தரிசனம் அருள் தரும் வரலாறு

 
பதினெட்டாம் படி பாலகன் வரலாறு் 


                                                               அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது....தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள். தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் ‘ட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.
எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். ராஜராஜன் என்ற அந்த ராஜகுமாரன் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது ‘ழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான். இது ‘ழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறனர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை தேவலோகத்தில் நின்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள். ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாதுஎன்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.
மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர். மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.
மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 4 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். 

அச்சம் தீர்க்கும் அச்சன் கோவில் 

                                         அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை ‘ழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.

                                      ஐயப்பன் பாலகனாக வளர்ந்தது குளத்துப்புழையில். இளைஞனானதும் அவர் அச்சன்கோயில் வந்தார். சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும்.
அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர ஐயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை. 

ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு
 
                                                    வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.
                                               ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.

  
                                                   அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.
                                               இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

                                         ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.



Monday, November 8, 2010

லினக்ஸ் எனக்குத் தேவையா ?

                                கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அண்மைக் காலத்தில் பல்வேறு நோக்கங்களூக்காக மேற்கொள்ளும் பலர், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாமா என்றும், அவ்வாறு மாறலாம் என்றால், அதற்கான காரணங்களாக எவற்றை நீங்கள் கூறுவீர்கள் என்ற வகையில் கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

                              விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்று உலகில் பரவலாகப் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் சிஸ்டமாக இருந்தாலும், லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில்  தொழில் நுட்ப  ஆய்வாளர்கள்  மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது. பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது.  அதற்கான சில காரணங்களை இங்கு காணலாம்.
1. பாதுகாப்பு:
                          லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கட்டுக் கோப்பான யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, யூனிக்ஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்துகையில், அதனைப் பயன்படுத்துபவர்கள் சரியாக அடையாளம் காணப்பட்டே பயன்படுத்த முடியும். லினக்ஸ் சிஸ்டத்தில் இந்த பாதுகாப்பு வசதி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பான இயக்க ஒருங்கு முறை என்று வருகையில், லினக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்திற்கு மேலானதாகவே உள்ளது. இன்று கம்ப்யூட்டர் உலகில் உலா வரும் பெரும்பாலான வைரஸ்கள் மற்றும் மால்வேர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்தினையே குறி வைத்து உருவாக்கப்பட்டு இயங்குகின்றன. இவை லினக்ஸ் சிஸ்டத்தில் ஊடுறுவிச் செயல்படுவது அரிதாகவே உள்ளது.
2.இலவசம்:
                              லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இன்னொரு சிறப்பு, இது முழுமையாக இலவசமாகக் கிடைப்பதுதான்.   லினக்ஸ் சிஸ்டத்தின் பலவகையான பதிப்புகள் இன்று அதிக அளவில், வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை மிக எளிய வகையில் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தலாம்.  விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த இலவசம் என்பது அனைவரையும் ஈர்க்கும் காரணமாகவே இருந்து வருகிறது.   
3.இயக்க வேகம்:
                             லினக்ஸ் சிஸ்டம் இயங்க எடுத்துக் கொள்ளும் நேரம் மிக மிகக் குறைவு. விண்டோஸ் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் இதன் பயனை நாம் அனுபவிக்கலாம். எடுத்துக் காட்டாக, அண்மையில் பலராலும் விரும்பிப் பயன்படுத்தும் லினக்ஸ் உபுண்டு பதிப்பு இயங்க 10 விநாடிகளே எடுத்துக் கொள்கிறது. வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த வேகம் இல்லை என்பது உண்மை.  விண்டோஸ் அடிக்கடி இயங்காமல் சண்டித்தனம் செய்திடும் என்பது அதனைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் கிடைத்த அனுபவமாகவே இன்று வரை இருந்து வருகிறது. மேலும் பல காரணங்களால் இயங்கும் வேகமும் படிப்படியாகக் குறைந்திடும் என்பதுவும் இன்னொரு சிக்கலான செயல்பாடாகவே உள்ளது. இந்த வகையில் எந்த பிரச்னையும் லினக்ஸ் சிஸ்டத்தில் இல்லை என்பதே உண்மை. இன்ஸ்டால் செய்து பல மாதங்கள் பயன்படுத்திய பின்னரும், பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னரும், லினக்ஸ் சிஸ்டத்தின் இயங்கும் வேகம் அப்படியே குறையாமல் இருக்கும்.
4. ஹார்ட்வேர் எதுவா னாலும் சரி: 
                                                         உங்கள் கம்ப்யூட்டர் எப்போது வாங்கப்பட்டிருந்தாலும், எந்த சிப் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்தாலும், அதில் லினக்ஸ் சிஸ்டத்தைப் பதிந்து இயக்க முடியும். விண்டோஸ் இயக்கம் தனக்கென குறைந்த பட்சம் சில தகுதிகள் கொண்ட ஹார்ட்வேர் இருந்தாலே இயங்கும். உங்கள் கம்ப்யூட்டர்  பழைய ஹார்ட்வேர் ஆக இருந்தாலும், குறைவான மெமரி கொண்டு இருந்தாலும் அதற்கேற்ற லினக்ஸ் பதிப்பினை இலவசமாக இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம்.
5. தவறாத மேடை:
                           லினக்ஸ் எந்த வேளையிலும் முடங்கிப் போகாத ஒரு இயக்கம். எனவே அடிக்கடி கிராஷ் ஆகி விட்டது என்ற பாடலைப் பாடும் விண்டோஸ் பயனாளர்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக உள்ளது. இதனால் தான் பல பெரிய நிறுவனங்கள் தங்கள் சர்வர்களில் லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவதனையே விரும்புகிறார்கள்.
6. லினக்ஸ் பயனாளர் குழுமம்:
                                                          பன்னாட்டளவில், லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கென குழுக்களை அமைத்துக் கொண்டு, இந்த சிஸ்டம் குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு தீர்த்துக் கொள்கின்றனர். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டி, தீர்வுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். சாதாரண பிரச்னையிலிருந்து, தங்களுக்கேற்ற வகையில் சிஸ்டத்தை அமைப்பது வரையிலான எந்த பிரச்னைக்கும் இந்த குழு உறுப்பினர்களிடன் தீர்வு கிடைக்கிறது.
7. பதிப்புகள் பல:
                              லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், நம் தேவைகளுக்கேற்ப, பலவகையான பதிப்புகளில்  இலவசமாகவே கிடைக்கின்றன. ஒவ்வொன்றின் வகை மற்றும் இயங்கும் தன்மையும் பலவிதமாக இருக்கின்றன. 32 பிட், 64 பிட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானவை, சர்வர்களில் வெவ்வேறு திறனுக்கானவை என இவை கிடைக்கின்றன. பொதுவாக எடுத்துக் கொண்டால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த  GNOME and KDE   என இரு வகைகள் உள்ளன. இவ்வாறு பலவகை இருப்பதனால், லினக்ஸ் பயன்படுத்த விரும்பும் ஒருவர் சற்று குழப்பத்திற்கு ஆளாகலாம். ஆனால் ஒருவர் தன் தேவைகளை முன்னிறுத்தினால், மேலே சுட்டிக் காட்டியபடி, லினக்ஸ் பயன் பாட்டுக் குழுவினர் இதற்கான அறிவுரையை வழங்குவார்கள்.
8.பல முன்னேற்றங்கள்:
                                                  டோர்வால்ஸ்  (Linus Torvalds)   முதலில் லினக்ஸ் சிஸ்டத்தை உருவாக்கிய போது, அது இந்த அளவிற்கு பயன்பாட்டிற்கும், ஆய்விற்கும் உள்ளாகும் என எண்ணவில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், லினக்ஸ் சிஸ்டத்தினை அனைவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கி தருகின்றனர். லினக்ஸ் பயன்படுத்துவதனை ஒரு நல்ல அனுபவமாக இவை முன்னிறுத்துகின்றன. இதனால் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள், தங்கள் பயன்பாட்டினை மேம்படுத்தும் வகையில் என்ன வகையான பதிப்புகள் வந்துள்ளன என்று பார்த்து, அவற்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடிகிறது.  இவ்வாறு தங்களுக்கான லினக்ஸ் பதிப்பினைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர், இதற்கென தனியே எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளத் தேவையில்லை. தேர்ந்தெடுத்த சிஸ்டத்தினைப் பயன்படுத்தி பழகினாலே போதும்.
9. திறவூற்று தன்மை:
                                        ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் திறவூற்று தன்மைக்கு லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் பெற்றது. அதாவது, இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்ட குறியீட்டு வரிகளை எவரும் எளிதாகப் பெற்று, தங்கள் தேவைக்கேற்றபடி இந்த சிஸ்டத்தினை உருவாக்க முடியும். இந்த தன்மைதான், இன்று லினக்ஸ் சிஸ்டத்தில் பல பயன்பாடுகளுடன் கூடிய தொகுப்புகள் உருவாகக் காரணமாக உள்ளது. தொடர்ந்து புதிய பதிப்புகளும் தயாராகிக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை இலவசமாகவே தரப்படுகின்றன.
மேலே தரப்பட்டுள்ள அனைத்து காரணங்களையும் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால், அவற்றை விரிவாகப் பார்க்கலாம். லினக்ஸ் பயன்பாட்டினை இன்னும் சிறப்பானதாக அவை காட்டும்.  லினக்ஸ் தொகுப்பை இதுவரை பயன்படுத்தாலம் இருந்தால், நீங்களும் இது குறித்து உங்கள் சிந்தனையைத் திருப்புங்களேன்.

Thursday, November 4, 2010

Help Troubleshoot the Blue Screen of Death by Preventing Automatic Reboot

            One of the most frustrating things about troubleshooting random blue screen errors is that the computer reboots before you have a chance to write down the error messages so you can Google them later. Here’s how to fix that.
  
                       This is especially annoying if you keep getting blue screen errors because of some device conflict—I remember watching one of my friends trying to time it so he could snap a picture with his camera before it rebooted…


Disable Automatic Reboot after Blue Screen Errors

The quick and easy solution is to just turn off the automatic reboot option and force the blue screen to stay there, so that’s what we’ll show today.
Right-click on the Computer icon and choose Properties. Windows 7 or Vista users will be taken to the system properties screen, so click on Advanced system settings.

The Advanced tab should already be selected, so you’ll want to click the Settings button under “Startup and Recovery”.


Here we go… just uncheck the option for Automatically restart under the System failure section.
Next time you get a BSOD you’ll be able to see it and able to write down the error message. You’ll have to manually reboot the computer if this happens, of course.

 

Wednesday, November 3, 2010

மாரடைப்பை கண்டறிவது எப்படி?


நெஞ்சுவலியின் தன்மை பற்றி முழுமையாக கேட்டு, மாரடைப்பு வருவதற்கான காரணம் உள்ளதா என அறிந்து சில மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன. அதன் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வந்துள்ளதா என கண்டறியப்படுகிறது




இ.சி.ஜி., (எலக்ட்ரோ கார்டியோ கிராம்):
* இதயம், மெல்லிய இழைகளாலான மின்சார வலையால் இயற்கையாகவே பின்னப்பட்டுள்ளது. இம்மின்சார இழைகளில் தானாக உருவாகும் மின் அலைகளால்தான் இதயம் சீராக இயங்குகிறது.
* ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், இத்தகைய மின்அலைகள் இதயத்தின் மேல்பாகத்தில் இருந்து அடிப்பாகம் வரை சீராக, முறையாக பரவுகிறது.
* இவ்வாறு இதயத்தில் பலபாகங்களில் ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், உருவாகும் மின்அலைகளை ஒரு இயந்திரத்தின் உதவியால் ஒரு தாளில் பதிவு செய்வதே இ.சி.ஜி., எனப்படுகிறது.
* மாரடைப்பு வருவோருக்கு இத்தகைய மின்அலைகளின் பதிவில் மாற்றங்கள் ஏற்படும்.
* அத்தகைய மாற்றங்களை வைத்து ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா, எப்போது ஏற்பட்டது, இதயத்தின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
ரத்தப் பரிசோதனைகள்:
* மாரடைப்பு ஏற்படும்போது இருதய தசையின் எந்தப் பாகத்தில் ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அப்பகுதி சில மணி நேரங்களில் செயலிழக்கிறது.
* இவ்வாறு செயலிழந்த தசைப் பகுதியில் இருந்து புரதச் சத்து கலந்த பலவகை ரசாயன பொருட்கள் கசிந்து ரத்தத்தில் கலக்கின்றன.
* மாரடைப்பு ஏற்பட்டு, இரண்டு மணி நேரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று நாட்கள் வரை வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு விதமான ரசாயனப் பொருள் கசிந்து ரத்தத்தில் கலக்கிறது.
* ரத்தத்தில் இவ்வாறு கலக்கும் ரசாயன பொருட்களின் அளவை வைத்து மாரடைப்பு உறுதி செய்யப்படுகிறது.
* மேலும் மாரடைப்பு ஏற்பட்ட நேரம், மாரடைப்பின் அளவு, இத்தகைய மாரடைப்பால் பின்னாளில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பவை பற்றியும் ஓரளவு துல்லியமாக கணிக்கலாம்.
* மாரடைப்பின்போது பொதுவாக ரத்தத்தில் பின்வரும் ரசாயனப் பொருட்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
1) Myoglobin, 2) Troponin.
 கொரனரி ஆஞ்சியோகிராம்:
இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயைப் பரிசோதிப்பதற்காகவும், இதய அறைகள் நல்ல முறையில் இயங்குகின்றனவா, இருதயத்தின் எந்த பாகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காகவும் எடுக்கப்படும் ஒருவித சிறப்பு தன்மை வாய்ந்த "எக்ஸ் ரே' தான் கொரனரி ஆஞ்சியோகிராம். ரத்தப் பரிசோதனை மூலம், இதய தசைக்குச் செல்லும் மூன்று ரத்தக்குழாய்களில் எந்த குழாயில் அடைப்பு உள்ளது, எத்தனை அடைப்பு உள்ளது, அடைப்பின் தன்மைகள் என்ன, அடைப்புகள் எளிதாக பலூன் முறை மூலம் சரிப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளதா என்பவற்றை கண்டறியலாம்.
ஆஞ்சியோகிராம் செய்யப்படுவது எப்படி?
*பொதுவாக இது எந்தச் சிக்கலோ, பக்கவிளைவோ இன்றி எளிதாக செய்யப்படும் பரிசோதனை.
* மெல்லிய, வளையும் தன்மை கொண்ட, நீளமான பிளாஸ்டிக் டியூப்கள் வலது கையின் மணிக்கட்டில் உள்ள ரத்தக்குழாய் மூலமாகவோ, வலது அல்லது இடது பக்கத் தொடைகளின் மேல்பகுதி இடுப்பில் உள்ள ரத்தக்குழாயின் வழியாகவோ செலுத்தப்பட்டு, பிளாஸ்டிக் குழாயின் நுனிப்பகுதி இதயத்தின் ரத்தக்குழாய்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
* இந்த பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக எக்ஸ்ரே மூலம் எளிதில் பார்க்கக் கூடிய ஒருவித சிறப்பு வேதியியல் பொருள் இருதயத்தின் ரத்தக்குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இருதய ரத்தக் குழாயின் தன்மைகளை முழுமையாக பரிசோதிக்கலாம்.
* இந்தப் பரிசோதனையை எந்த வலியில்லாமலும், மயக்க மருந்து கொடுக்காமலும் எளிதாக செய்யலாம். மருத்துவ மனையில் ஓரிரு நாட்கள் தங்கினால் போதும்.
எக்கோ கார்டியோ கிராம்:
* இதுவும் ஒரு எளிதான, வலி ஏதும் இல்லாத பரிசோதனையே. பொதுவாக இது மாரடைப்பை கண்டுபிடிக்கத் தேவையான கட்டாய பரிசோதனை அல்ல.
* ஆனால் சில சமயங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழும்போது இ.சி.ஜி., பரிசோதனையில் எந்த மாற்றமும் தெரியாமல் இருக்கலாம்.
* குறிப்பாக மாரடைப்பு இதயத்தின் பின்பாகத்தில் ஏற்படும்போது, இ.சி.ஜி.,யில் எந்த மாற்றமும் தோன்றாமல் இருக்கலாம்.
* இத்தகைய சூழலில் எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* இப்பரிசோதனையில் இடதுபுற மார்பு பகுதியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் முறைமூலம், இருதய தசையின் எல்லா பாகங்களின் செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறியலாம்.
* மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாகத்தின் செயல்பாடு குறைந்திருப்பதை இப்பரிசோதனையில் கண்டறிந்து, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும், அதன் அளவையும் உறுதி செய்யலாம்.

- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா,  மதுரை.  தொடர்புக்கு: 99447-94093

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
"கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில்  ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம்; சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம்; கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 - 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது.  கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம்.  கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவதுநல்லது.

சில சந்தேகங்கள்...  சில பதில்கள்!
அடர்பஞ்சு அடைப்பான் பயன்படுத்துவது ஆபத்தா?
சத்யா, சென்னை: மாதவிடாயின் போது பஞ்சு அட்டை (சானிட்டரி நாப்கின்) வைத்து கொள்வது ஆபத்தா? அடர் பஞ்சு அடைப்பான் (டாம்பூன்) பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா?
துணி பயன்படுத்துவதை விட, பஞ்சு அட்டை பயன்படுத்துவது மிகவும் சுத்தமானது. அவை ஆபத்தானது அல்ல. உடலில் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. பெண் உறுப்பில் சொறுகிக் கொள்ளக் கூடிய வகையில் உள்ள, "டாம்பூன்' வசதியான வடிவமைப்பில் உள்ளதாலும், ஈர உணர்வு இல்லாமல் இருப்பதாலும், பெரும்பாலான பெண்களால் பயன்படுத்தப்படுகிறது. எனினும், நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை, புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும். நெடுநேரம் மாற்றாமல் இருந்தால், "ஸ்ட்ரெப்டோகாகி, ஸ்டாபிலோகாகி' வகை பாக்டீரியாக்கள், நச்சை உருவாக்கி, தொற்று ஏற்படுத்தி விடும். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். முறையாக பயன்படுத்தினால், பாதுகாப்பானதே. மேலே சொன்ன எந்த பொருளும், புற்றுநோயை விளைவிக்கும் தன்மை கொண்டவை அல்ல.

Thursday, October 28, 2010

கண்கள் கவனம்

நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: 
                                       முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு  20டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
2. ஒளி அமைப்பு:
                              அறையில் ஒளி அமைப்பு நம் கண்களுக்கு பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடிவமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: 
                            மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.
 பொதுவாக ஒரு நிமிடத்தில் நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.
ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

3. இதமான சூடு தேவை: 
                                               கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால்,  அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

4. தண்ணீர் கொண்டு அடித்தல்:
                                                        இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால்  கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. தேயிலை பைகள்: 
                                   பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட  நனைக்கப்பட்ட துணியை, அலுவலகத்திற்குச் செல்கையில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும்.  பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

6. வைட்டமின்கள்:
                                       ஊட்டச் சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.
கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.

சர்ச் பாக்ஸில் தேடல்
                                வேர்டில் சர்ச் (Search) கட்டம் மூலம் ஒரு சொல்லைத் தேடிக் கண்டுபிடிக்கிறீர்கள். அதனை எடிட் செய்கிறீர்கள். பின் சர்ச் கட்டத்தை மூடிவிட்டு வேறு செயல்களில் ஈடுபடுகிறீர்கள். பின் மீண்டும் அதே சொல்லை வேறு இடங்களில் இருக்கிறதா எனத் தேட விரும்புகிறீர்கள். மீண்டும் சர்ச் செயல்பாட்டிற்கான கீகளை அழுத்தி தேடுதல் கட்டம் வரவழைத்து சொல்லை டைப் செய்து என்டர் அழுத்தியெல்லாம் தேட வேண்டாம். ஷிப்ட் கீயை அழுத்தி எப்4 (Shft+F4) அழுத்துங்கள். இறுதியாகத் தேடிய சொல்லை மீண்டும் டைப் செய்யாமலே வேர்ட் உங்களுக்குத் தேடிக் கொடுக்கும்.

வேர்ட் டிப்ஸ் - ஒரே செயல்பாடு - ஒரே கீ
                                                               தயாரித்த டாகுமெண்ட் ஒன்றில் சில வரிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் சில சொற்களுக்கு அடிக்கோடிட எண்ணுகிறீர்கள். என்ன செய்வீர்கள்? அந்த சொற்களைத் தனித் தனியே தேர்ந்தெடுத்து பின் கண்ட்ரோல் பிளஸ் யு (Ctrl +U)  அழுத்துவீர்கள். இவ்வாறு ஒவ்வொரு சொல்லாகத் தேர்ந்தெடுத்து கோடிடுவீர்கள். இதற்கு ஒரு குறுக்கு வழி உள்ளது. முதலில் ஒரே ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து அதில் மேற்சொன்ன வழியில் அடிக்கோடிடுங்கள்.
பின் எந்த சொற்களுக்கு கோடிட வேண்டுமோ அதில் கர்சரை வைத்து எப்4 (F4) கீயை அழுத்தவும். கோடு உடனே இடப்படும். இப்படியே ஒவ்வொரு சொல்லாகக் கர்சரைக் கொண்டு சென்று கோடிடலாம். கோடு மட்டுமல்ல வேறு செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். அதாவது எப்4 கீயை அழுத்துகையில் அதற்கு முன் எந்த செயல்பாட்டை மேற்கொண்டோமோ அந்த செயல்பாடு மறுபடியும் மறுபடியும் மேற்கொள்ளப் படும். சொல் அடிப்பது, பார்மட் செய்வது போன்ற செயல்களும் இதில் அடக்கம். செய்து பாருங்கள். வியப்பில் உங்கள் விழிகள் விரியும்.

அடோப் ரீடர் பதிப்பு 9.4
                                 அடோப் நிறுவனம், தன்னுடைய மிகவும் பிரபலமான பி.டி.எப். ரீடர் மற்றும் அடோப் அக்ரோபட் ஆகியவற்றின் புதிய பதிப்பு 9.4 ஐ வெளியிட்டுள்ளது. இந்த இரண்டிலும், ஏற்கனவே வெளியான பதிப்பு 9.3.4ல் உள்ள குறைபாடுகள் மற்றும் பிழையான இடங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
இந்த குறைபாடுகள், ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் அனைத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக இருப்பதால், இவற்றை ஏற்கனவே பயன்படுத்தி வந்தவர்கள், உடனே அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

Tuesday, September 28, 2010

அயோத்தி சர்ச்சை தீர்ப்பு தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டில் மனு நிராகரிப்பு ; விரைவில் தீர்ப்பு



புதுடில்லி: 
                     60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருக்கும் அயோத்தி சர்ச்சை தீர்ப்பு தொடர்பான தடை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 24 ம் தேதி அலகாபாத் ஐகோர்ட் இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்க இருந்தது. இந்நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என காரணம் காட்டி ரமேஷ் சந்த் திரிபாதி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தடை உத்தரவு வழங்கினர். இந்த தடை ஒருவார காலம் அமலில் இருக்கும் என கடந்த 23 ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு நீதிபதிகள் , வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், மத்திய அரசு அட்டர்னி ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் அயோத்தி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு விசாரணையை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ் எச். கப்பாடியா தலைமையிலான நீதிபதிகள் அப்தாப் ஆலம், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என கோர்ட் அறிவித்தது. இதன்படி தடை தொடர்பான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட வக்கீல்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர். மனுதாரர் வக்கீல் நாட்டில் யாரும் அயோத்தி தீர்ப்பு வெளிவர விருப்பம் காட்டவில்லை.,சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படும். செட்டில்மென்ட் ஆகும் வகைக்கு சுப்ரீம்கோர்ட் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். என வாதிட்டார். காமன்வெல்த்போட்டி , ஒபாமா வருகை குறித்தும் கோர்ட்டில் எடுத்து கூறப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான அட்டர்ஜி ஜெனரல் தனது வாதத்தில் காலம் தாழ்த்தாத எந்த ஒரு நல்ல முடிவு ஏற்பட்டாலும் நாங்கள் வரவேற்கிறோம் என்றார். இதனையடுத்து இன்று மதியம் 2  மணிக்கு உத்தரவு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்படி மதியம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். அலகாபாத் கோர்ட் என்று வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கலாம் என்றனர்.

தீர்ப்பு தடை விலக்கல் : 
                                                    காங்., பாஜ., வரவேற்பு:  சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு காங்., பா.ஜ., வினர் வரவேற்பு அளித்துள்ளனர். விரைவான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் கூறினார்.


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிடுவதாக இருந்தது. இந்நிலையில், ஓய்வு பெற்ற அதிகாரியான ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர், "சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அதை உடனே விசாரிக்க மறுத்த நீதிபதிகள், அதை மற்றொரு பெஞ்சின் விசாரணைக்கு பட்டியலிடும்படி, சுப்ரீம் கோர்ட் பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட் வெளியிட, ஒரு வார காலம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி திரிபாதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 28ம் தேதிக்கு(இன்று) தள்ளிவைக்கப்பட்டது. மேலும், அயோத்தி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் : இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், அயோத்தி விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து இரு தரப்பினரும் வழக்கு தொடுத்துள்ளனர். அவர்கள், தங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைத் தீர்க்க முன்வர வேண்டும். அது சாத்தியமாகாத பட்சத்தில், கோர்ட் தீர்ப்பு ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்' என்று யோசனை தெரிவித்தார். காங்., கட்சி இக்கருத்தைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இன்றைய விசாரணைக்காக பதில் மனுக்களை சன்னி மத்திய வக்ப் வாரியமும், அகில பாரத இந்து மகாசபாவும் தனித்தனியாக தாக்கல் செய்துள்ளன.இந்த இரு அமைப்புகளுமே, அயோத்தி விவகாரம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தீர்ப்பை வழங்க வேண்டும். இதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளன.

தீர்ப்பை தள்ளி வைக்க எதிர்ப்பு : 
                                                                       சன்னி மத்திய வக்ப் வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில், "60 ஆண்டு காலமாக நடக்கும் சர்ச்சையில், கோர்ட்டிற்கு வெளியே பிரச்னையை தீர்த்து கொள்வது என்பது முடியாத காரியம். 19 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில், வழக்கு போட்டுள்ள திரிபாதி பங்கேற்கவில்லை. மேலும், இறுதி தீர்ப்புக்காக 90 நாட்கள் நடந்த இறுதி விசாரணையிலும் திரிபாதியோ அவரது சார்பில் வக்கீலோ பங்கேற்கவில்லை. எனவே இதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு மனுதாரரும் 89 வயதான முகமது ஹசிம் தாக்கல் செய்த மனுவில், "திரிபாதியின் மனுவை டிஸ்மிஸ் செய்து, அலகாபாத் ஐகோர்ட் உடனடியாக தீர்ப்பு வழங்கும் வகையில், இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என' கேட்டுக் கொண்டுள்ளார். மற்றொரு முக்கிய மனுதாரரான நிர்மோகி அகாரா, தன் மனுவில், "தீர்ப்பு வழங்குவதை மூன்று மாதத்திற்கு தள்ளிவைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு சுப்ரீம் கோர்ட் வழி வகுக்க வேண்டும்' என கோரியுள்ளார்.

முக்கிய மனுதாரரான, அகில பாரத இந்து மகாசபா தாக்கல் செய்த மனுவில், "இப்போதுள்ள சூழ்நிலையில் சுமுகமான தீர்வு என்பது இயலாத காரியம். கோர்ட் தீர்ப்பு மூலம் தான் முடிவு காண வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் பதில் மனு தாக்கல் செய்துள்ள அனைவரும் ஒரு கருத்தை உறுதிப்பட தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் மூன்று உறுப்பினர் பெஞ்சில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவர், அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, தீர்ப்பு அதற்கு முன்பாக வெளிவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  வரும் 30 ம் தேதி மாலை 3. 30க்கு இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளி்யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, September 16, 2010

பொங்கல் பண்டிகை பிறந்தது எப்படி?

எக்காலமாக இருந்தாலும், பொங்கல் என்பது விவசாயத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத <உண்மை. இது இன்று நேற்றல்ல. இந்திரவிழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையில் "இந்திர விழா' என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது தெரிய வருகிறது. காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த விழா இப்போது தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகாருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத்திய போது, அதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.

இப்போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன்னால் ஆன பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத்தோரணங்கள் கட்டப்பட்டன. அன்றையச் செல்வச் செழிப்பிற்கேற்ப தங்கத்தூண்களில் முத்துமாலைகள் தொங்க விடப்பட்டன. நகர வீதிகளிலுள்ள பழைய மணலை மாற்றி புதுமணல் பரப்பினர். கொடிகள் கட்டப்பட்டன. காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையெல்லாம் விட உயர்ந்த ஒரு தர்மம் இந்த விழாவை ஒட்டி பின்பற்றப்பட்டது. ஒருவருக்கு யாரேனும் பகைவர்கள் இருந்தால், அவர்களை விட்டு விலகிச் சென்று விட வற்புறுத்தப்பட்டது. ஒரு நல்ல நாளில், தேவையற்ற சண்டைகள் வேண்டாமே என்பதற்காக இவ்வாறு அரசு சார்பிலேயே அறிக்கை விடப்பட்டது. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.


மழைக்குரிய தெய்வம் இந்திரன்.
அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் பச்சை செழிக்கும் என மக்கள் நம்பினர். பிற்காலத்தில், சூரியனைப் பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், சூரியனே சீதோஷ்ணத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். தங்கள் விளைச்சலுக்கு காரணம் அவரே என நம்பினர். பூமியில் இருக்கும் நீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பவர் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புதுநெல்லை தை முதல்நாளில் சமைத்ததால், இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.

அயோத்தி சர்ச்சை 24 ம் தேதி தீர்ப்பு ; சமரசம் ஏற்படுத்த இன்று முக்கிய கூட்டம்

லக்னோ:
சர்ச்சைக்குரிய அயோத்தி விவகாரம் 60 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பளிக்கப்படுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2 . 77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற நீண்ட கால சர்ச்சை வரும் வெள்ளிக்கிழமை ( 24 ம் தேதி ) முடிவுக்கு வருகிறது. 60 ஆண்டு காலம் நடந்து வரும் தீர்ப்பு எப்படி இருக்கும் , என்னவாக இருக்கும் , இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்களா இல்லையேல் சமரத்தீர்வு எப்படி காண்பது என்பதில் மத்திய அரசு பெரும் அளவில் அக்கறை எடுத்து பல தரப்பு யோசனைகளையும் கேட்டு ஆலோசித்து வருகிறது.
 
தீர்ப்பு எப்படி இருப்பினும் இதனை இறுதி தீர்வாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தரப்பில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அயோத்தியில், 1528ம் ஆண்டில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால், இந்த மசூதி அங்கிருந்த கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக, இந்துக்கள் புகார் தெரிவித்தனர். சுதந்திரத்திற்குப் பின், 1949ல் இந்த இடத்திற்கு உரிமை கோரி, இந்துக்கள் தரப்பிலும், முஸ்லிம்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொண்டது.
 
அமைச்சரவை ஆலோசனை :
சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்சில், 2002ம் ஆண்டு ஏப்ரலில் துவங்கியது. வழக்கு விசாரணையின் போது, 88 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.இவர்களில் 34 பேர் முஸ்லிம்கள்; 54 பேர் இந்துக்கள். நீதிபதிகள் மாற்றம் , ஓய்வு காரணமாக இந்த வழக்கின் விசாரணை மூன்று முறை புதிதாக துவங்கியது. இந்த தீர்ப்பு வெளியாக இருப்பதையொட்டி மத்திய அமைச்சரவை நேற்று ( வியாழக்கிழமை ) கூடி விவாதித்தது. இந்த ஆலோசனைக்கு பின்னர் அரசு தரப்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.
 
அமைதி காத்திட வேண்டுகோள்:
இந்த விளம்பரத்தில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும், யாரும் யாரையும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள கூடாது. வரும் தீர்ப்பு முடிவானதல்லை , இதில் ஏற்றுக்கொள்ள முடியாத எந்த ஒரு தரப்பினரும் இந்த விஷயத்தில் இறுதியான முடிவு என கருத வேண்டாம். அனைவரும் அமைதி காத்திட வேண்டும். என கூறப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில் அலகாபாத்தில் கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் கொண்ட ஒரு சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தீர்ப்பு ஒத்திவைக்ககோரி மனு : 
இந்த வழக்கின் தீர்ப்பின் காரணமாக நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காமன் வெல்த் போட்டி நடைபெற இருக்கும் இந்த நேரத்தில் தீர்ப்பு வெளியானால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வரும் 24 ம் தேதி தீர்ப்பை வெளியிடாமல் வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, September 15, 2010

எல்.ஜி.யின் புதிய போன்கள்





 


இரண்டு மத்திய ரக போன்களை மக்கள் விரும்பும் வசதிகளுடன் விற்பனைக்கு எல்.ஜி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதலாவதாக கேண்டி பார் வடிவில் வந்துள்ள  எல்.ஜி.   ஜி.டபிள்யூ 300, பிளாக்பெரி தன் இ சீரிஸ் போன்களில் பிரபலப்படுத்திய கீ போர்டின் வடிவமைப்பிலான குவெர்ட்டி கீ போர்டைக் கொண்டுள்ளது. பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டு, எடை குறைவாக இருந்தாலும் மிக உறுதியாக உள்ளது. 2.4 அங்குல QVGA டிஸ்பிளே திரை தரப்பட்டுள்ளது. அறையின் உள்ளேயும் வெளியேயும் இதன் டிஸ்பிளேயை எளிதில் காண முடிகிறது. 16 ஜிபி வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் மெமரியை அதிகப்படுத்த முடியும். போனின் பின்புறத்தில் 2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.  இதில் ஆட்டோ போகஸ் மற்றும் பிளாஷ் இல்லை. ஆனால் அது ஒரு குறையாகத் தெரியவில்லை. இதன் மிகச் சிறந்த அம்சமாக , ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் தன்மையினைக் கூறலாம். ஒரு அப்ளிகேஷனை இயக்கிக் கொண்டிருக் கையிலேயே இன்னொரு அப்ளிகேஷனுக்கு மாறிக் கொள்ளலாம். பின் மீண்டும் பழைய அப்ளிகேஷனைத் தொடரலாம். அல்லது மெயின் மெனு செல்லலாம்.  ஆனால் இதில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்கான நேரடி இணைப்பு இல்லை. ஆனால் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற தள இணைப்புகளை டவுண்லோட் செய்து இயக்கலாம்.  இதில் உள்ள மியூசிக் பிளேயர் சிறப்பாக இயங்குகிறது. பலவகை பார்மட்டுகளில் உள்ள பாடல் பைல்களை இயக்குகிறது. ஹெட்போன்ஸ் வழியாக இசை ஒலி துல்லியமாக உள்ளது. எப்.எம். ரேடியோவும் சிறப்புடன் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள வெப் பிரவுசர், ஆப்பரா மினி அளவிற்கு வசதிகளுடன் இல்லாததால், நிச்சயம் அனைவரும் ஆப்பரா மினி பிரவுசரை டவுண்லோட் செய்து பயன்படுத்துவார்கள். இதன் விலை ரூ.4,800 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் இவ்வளவு வசதிகள் இருப்பதால், நிச்சயமாக மக்களிடையே நல்ல வரவேற்பை இந்த போன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
                              
அடுத்ததாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய எல்.ஜி. போன் மாடல் ஜி.எக்ஸ். 300. இது இரண்டு சிம்களில் இயங்கக் கூடியது. இது ஒரு 3ஜி போன் அல்ல; நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது.  இதன் பரிமாணம் 116 x 51 x 12.8 மிமீ என்ற அளவில் உள்ளது. இதன் 2.2 அங்குல திரை டி.எப்.டி. 176 x 220 என்ற பிக்ஸெல் அளவில் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆயிரம் முகவரிகளைத் தாங்கும் போன் அட்ரஸ் புக் தரப்பட்டுள்ளது. இதன் மெமரி 30 எம்.பி. இதனை 4 ஜிபி வரை நீட்டிக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. மூலம் டேட்டா பரிமாறிக் கொள்ளலாம். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இமெயில் வசதிகள் நன்றாக இயங்குகின்றன.  இதில் 2 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் போட்டோக்கள் 1600 x 1200 பிக்ஸெல் திறனுடன் கிடைக்கிறது. இதில் உள்ள பேட்டரி திறனுடன் உள்ளது. ஆனால் இந்த அளவிலான மின் சக்தியைச் செலவழித்துப் பயன்படுத்தும் அளவிலான சாதன வசதி இல்லாததால், பேட்டரி உழைக்கும் நாள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.  கருப்பு வண்ணத்தில் கிடைக்கும் இந்த போன் கடைகளில் ரூ.4,950 என்ற அளவில் உள்ளது.  இரண்டு சிம் பயன்பாட்டிற்காக  மொபைல் போன்  வாங்க விரும்புபவர்கள் இதனை வாங்குவது குறித்து சிந்திக்கலாம்.

* ஜாய் ஸ்டிக் வைத்து போனில் அதிக கேம்ஸ் விளையாடி னால், ஜாய் ஸ்டிக் விரைவில் கெட்டுப் போக வாய்ப் புண்டு. எனவே அழைப்புகள் இல்லாமல், அதிகம் இதனைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும்.
* சிம் எண், மொபைல் போன் தனி அடையாள எண், பெயர் மற்றும் எண்கள் ஆகியவற்றை  ஏடு ஒன்றில் குறித்து வைக்கவும். அல்லது கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்திடவும்.

Tuesday, September 14, 2010

அவுட்சோர்சிங் பணி தடை :அமெரிக்க அறிவித்தது

தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐ.டி.,) பணிகளை இனி அவுட்சோர்சிங் அளிப்பதில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்நாட்டின் ஓகையோ மாகாணம், தடை விதித்துள்ளது குறித்து, ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா கவலை தெரிவித்துள்ளார்.

ஐ.டி., துறையில், வெளிநாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் வேலைகளை வெளிநாடுகளில் அந்நாட்டு பணியாளர்கள் மூலம் நடத்தி வருகின்றன. அவுட்சோர்சிங் என்ற இப்பணியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடம் வகித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவுட் சோர்சிங் பணியைக் குறைத்து, உள்நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஒபாமா ஆட்சியைப் பிடித்தார். சமீபத்தில் அவுட்சோர்சிங் குறைக்கப்படும் என்று அறிவித்தார்.  அமெரிக்க அரசின் வரிச்சலுகைகளைப் பெறும் கம்பெனிகள் தங்கள் பணிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதனால் லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் அமெரிக்கர்களுக்கு வேலை இல்லை. ஆகவே இப்பணிக்கு எதற்காக வரிச்சலுகை என்பது அவர் வாதம். அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான ஓகையோ, அரசு ஐ.டி., வேலைகள் வெளியிடப் பணிக்கு அளிக்கப்படுவதைத் தடை செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ரோசய்யா கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆந்திரா நான்காம் இடம் வகிக்கிறது. இங்கு அத்துறையில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த நிதியாண்டில் இத்துறை மூலம் 35 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் திடீர் முடிவு, ஆந்திராவைப் பெருமளவில் பாதிக்கும் என்பதால், இதுகுறித்து அமெரிக்காவுடன் கலந்து பேசி உடனடியாக ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, ஐ.டி., அமைச்சர் ஆ.ராஜா ஆகியோருக்கு ஆந்திர முதல்வர் ரோசய்யா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தடையற்ற வர்த்தகம் மற்றும் போட்டிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும் அமெரிக்கா தான். அதிபர் ஒபாமா இந்தியா வரும் வேளையில், இருதரப்பு வர்த்தகங்களுக்கு இடையில் கண்ணுக்குத் தெரியாத சில தடைகள் உருவாவது, இருதரப்பு உறவுகளுக்கான நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை. உலகின் முன்னணி 500 நிறுவனங்களில் பாதிக்கும் மேலானவை, இந்தியாவில் அவுட்சோர்சிங் மூலம் பணிகளை ஒப்படைத்து வருகின்றன. அமெரிக்காவின் இந்த முடிவு, ஐ.டி., துறையில் படித்த பட்டதாரிகளின் நலன்களுக்கு எதிராகத் தான் அமையும். ஆந்திர ஐ.டி., துறை லட்சக்கணக்கான இளம் பொறியாளர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. ஓகையோவின் இந்தத் தடை, அமெரிக்காவின் பிற மாகாணங்களுக்கும் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான அறிகுறியாகத் தான் தெரிகிறது. இவ்வாறு ரோசய்யா எழுதியுள்ளார்.

இனி வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லவேண்டாம் வீட்டில் இருந்தே கம்ப்யூட்டரில் பதிவு செய்யலாம்

மதுரை : தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்' மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.

இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இதையொட்டி அனைத்து அலுவலகங்களிலும் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் முடிவடைந்து, ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் தயார் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. இப்புதிய வசதியை நாளை (செப். 15) காலை 11 மணிக்கு  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார்.

இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே "ஆன்லைனில்' பதிவு செய்யலாம். அதற்கான இணையதள முகவரி:  www.tnvelaivaaippu.gov.in    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கமிஷனர் ஜீவரத்தினம் கூறியதாவது: புதிய வசதி மூலம் மாணவர்கள் சிரமமின்றி கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். கம்ப்யூட்டரில் அதற்காக விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் "ஸ்கேன்' செய்து அனுப்ப வேண்டும். அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும்.  மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை,'' என்றார்.

Saturday, September 11, 2010

Solstice Full Moon

A full moon rises behind the columns of the ruined Greek temple of Poseidon on Cape Sounion, south of Athens, on the night of the summer solstice. "The rising full moon at Sounion was a unique way to freeze a very special and breathtaking moment, involving our 4.5-billion-year-old celestial neighbor and the 2,500-year-old temple," Greek photographer Anthony Ayiomamitis says. The picture won high commendation.

VINAYAGAR CHATURTHI

 WISH U ALL HAPPY VINAYAGAR CHATURTHI




 
                                 

                  



VINAYAGAR CHATURTHI   festival is celebrated as the birthday of Lord Ganesha. 
 The first prayer of a Hindu is always to Vinayagar

Vinayagar has many names and many forms of His own.The word Vinayagar or Vinayagan is a combination of Vi + Nayagan.“Vi” means “No” while “Nayagan” means “head”.Vinayagar literally means He who has no leader.That is, He himself is the leader of all and therefore the highest.
 Vinayagar represents unity.He has a revered place in all Hindu temples including the Siva temple and the Krishna temple.This serves to remind the overzealous Vaisnavites and the overzealous Saivites that Siva and Krishna are one and the same. 


                               ஔவையார் அருளிய
                        விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎ றிப்பப்
பேழை வயிறும், பொரும்பாரக் கோடும் 05
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 15
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து 20
குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் 25
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து 30
தலமொரு நான்கும் தந்துஎனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும் 35
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் கழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி 50
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து 55
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிங்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் 60
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 65
கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே
விநாயகர் அகவல் முற்றிற்று





Thursday, September 9, 2010

எல்லா பணமும் "கறுப்பு' அல்ல : சுவிஸ் தூதரகம் புது விளக்கம்

                                                                   


புதுடில்லி : "சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் டிபாசிட் செய்துள்ள பணம் அனைத்தும், கறுப்பு பணம் அல்ல' என, டில்லியில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

"சுவிஸ் வங்கியில் மொத்தம் 2,050 பில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டவர்கள் டிபாசிட் செய்துள்ளனர். இதில் 50 சதவீதம், சம்பந்தப் பட்ட அரசாங்கத்திடம் இருந்து வாடிக்கையாளர்கள், அனுமதி பெற்று டிபாசிட் செய்துள்ளனர்' என, சுவிட்சர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் மிச்செலின் காமிரே, செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள மீதமுள்ள 50 சதவீத பணம், கறுப்பு பணமா என்பது குறித்து, அவர் விளக்கமளிக்கவில்லை. இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்திற்கு, டில்லியில் சுவிஸ் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இது குறித்து சுவிட்சர்லாந்து தூதர் பிலிப் வெல்தி விளக்கமளித்துள் ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டினர் டிபாசிட் செய்துள்ள 102 லட்சம் கோடி ரூபாய் பணம் மட்டுமே சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகளின் அங்கீகாரம் பெறாதவை. இதனால் சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள மொத்த பணமும், "கறுப்பு' பணம் என்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், இந்தியர்களின் கறுப்பு பணம், பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுவிஸ் வங்கிகளில் 73 லட்சம் கோடி கறுப்பு பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளதாக, ராஜ்ய சபா எம்.பி.,யும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், சுவிட்சர்லாந்து தூதர் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.2,000 கோடி செலவு

சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். கணக்கெடுப்பிற்கு, மத்திய அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் செலவாகும்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், 1931ம் ஆண்டில் முதன் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், இந்த நடைமுறை கைவிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது. அப்போது, மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என, முக்கிய அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இரு வேறு கருத்துகள் நிலவியதால் மத்திய அமைச்சர்கள் அடங்கிய உயர் மட்டக்குழுஅமைக்கப்பட்டது. இந்நிலையில், ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவது என, மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இதை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவர் கூறியதாவது: கடந்த 1931ம் ஆண்டுக்கு பின், முதன்முறையாக, சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. தற்போது நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, ஜாதி வாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் துவக்க அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கி, பல்வேறு கட்டங்களாக இது நடைபெற்று, செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இந்த கணக்கெடுப்பை சென்சஸ் கமிஷன் நடத்தி முடிக்கும். ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும்போது, எந்த மாதிரியான அணுகுமுறையை கடைபிடிப்பது, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் ஜாதிகளை எவ்வாறு பட்டியல் இடுவது என்பன குறித்து, சென்சஸ் கமிஷன் மற்றும் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகள் பெறப்படும்.

ஊர் ஊராக சென்று எடுக்கப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பையும், அங்கிருந்து பெறப்படும் விவரங்களையும், ரிஜிஸ்ட்ரர் ஜெனரல் மற்றும் சென்சஸ் கமிஷன் அலுவலகம் தீவிரமாக கண்காணிக்கும். இறுதியாக, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பட்டியல் வாரியாக ஜாதிகளை பிரிக்கவும், வகைப்படுத்தி முறைப்படுத்தவும் வல்லுனர் குழுவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, என்றார். இதற்கு ரூ. 2,000 கோடி செலவாகும். தற்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு 2,200 கோடி ரூபாய் செலவாகும் என, ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது.

Monday, September 6, 2010

புலிகள் காப்பக நீர்நிலைகள் "புல்''

நீலகிரி:




                                                    
 முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை<<, புலி, மான் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் வசிக்கின்றன.  கடும் வறட்சியால் இந்த விலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக வறட்சி நீங்கியது. கூடலூர் மற்றும் புலிகள் காப்பக சுற்றுப் பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்வதால், நீராதாரங் களில் நீர் வரத்து அதிகரித் துள்ளது. முக்கிய நீர் நிலையான மாயார் ஆற்றில் நீர் பெருகியுள்ளது. மொத் தத்தில், புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதி களில் உள்ள நீர் நிலைகளில் நீர் நிறைந்து, வழிகின்றது.  இதை தொடர்ந்து, காடுகளில் இருந்து வெளி யேறிய விலங்குகள் மீண்டும் அவற்றின் இருப் பிடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன.

2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை

2000 ஆண்டு தொடங்கும் முன்னால்,Y2K என்று ஒரு பிரச்னை அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டது. கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள், 2000 ஆண்டு தொடங்கும்போது தவறாக தேதியைக் கணக்கிடத் தொடங்கும் என்றும் இதனால் உலகெங்கும் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் பேசப்பட்டது. பல நிறுவனங்கள் தற்காப்பு நடவடிக்கையாகப் பல வழிகளைக் கையாண்டனர். இறுதியில் எதிர்பார்த்த இழப்புகள் ஏற்படவில்லை. அதற்கான தேவையான மாற்றங்களைப் பல நிறுவனங்கள் தாங்களாக மேற்கொண்டனர்.
இப்போது இன்னொரு பிரச்னை எதிர்பார்க்கப்படுகிறது. இது 2038 ஆம் ஆண்டில் ஏற்படும் என அறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னைUnix Millennium Bug, Y2K38  அல்லது Y2.038K  என அழைக்கப்படுகிறது.
இந்த பிரச்னைக்குக் காரணம் சி புரோகிராமிங் மொழியில் பின்பற்றப்படும் ஒரு செயல்பாடுதான். சி புரோகிராம் ஸ்டாண்டர்ட் டைம் லைப்ரரி என்று ஒரு கோட்பாட்டினைப் பின்பற்றுகிறது. இதில் நேரமானது 4 பைட் பார்மட்டில் கணக்கிடப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி நேரத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் கணக்கீடுகள், மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்த 4 பைட் ஸ்டாண்டர்ட் நேரத்தைக் கணக்கிடுகையில், நேரத்தின் தொடக்கத்தினை ஜனவரி 1, 1970 12:00:00 முற்பகல் ஆக எடுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில் நேர மதிப்பு 0 எனத் தொடங்கப்படுகிறது. எந்த ஒரு நேரம் மற்றும் தேதியின் மதிப்பு இந்த 0 மதிப்பிற்குப் பின்னர் விநாடிகளின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, எடுத்துக் காட்டாக     919642718  என்ற மதிப்பு ஜனவரி 1, 1970 12:00:00 முற்பகலுக்குப்பின்  919642718 விநாடிகள் எனக் கணக்கிடப்படும். அப்படிக் கணக்கிடப்படுகையில் விடை ஞாயிறு, பிப்ரவரி 21, 1999 16:18:38 எனக் கிடைக்கும்.  இது ஒரு வசதியான கணக்கீடு. ஏனென்றால் இரண்டு மதிப்புகளை விநாடிகளில் கணக்கிட்டு இதன் மூலம் நேரம் மற்றும் நாளினைக் கையாள முடிகிறது. இதன் மூலம் இரு வேறு நேரம், நாள், மாதம் ஆண்டுகளைக் கையாள முடியும்.
ஆனால் ஒரு 4 பிட் இன்டிஜர் வழியைப் பின்பற்றுகையில் அதன் வழி சொல்லப்படக் கூடிய  அதிக பட்ச மதிப்பு   2,14,74,83,647ஆகும். இங்கு தான் ஆண்டு 2038 என்ற பிரச்னை எழுகிறது. இந்த மதிப்பை நாள் கணக்கில் பார்க்கையில், அது ஜனவரி 19, 2038 03:14:07  ஆக மாறுகிறது. இந்த நாள் அன்று, சி புரோகிராம்கள் நேரம் கணக்கிடுவதில் திணற ஆரம்பிக்கும். ஏனென்றால் இதற்குப் பின்னர் இந்த புரோகிராம் கள் நெகடிவ் நேரம் காட்டத் தொடங்கும்.
புரோகிராம் எழுதத் தெரிந்தவர்கள், கீழ்க்காணும் சி புரோகிராம் ஒன்றை எழுதி இயக்கிப் பாருங்கள். உங்களுக்கு இதன் பொருள் தெரியும்.
01.#include <stdlib.h>
02.#include <stdio.h>
03.#include <unistd.h>
04.#include <time.h>
05.
06.int main (int argc, char **argv)
07.{
08. time_t t;
09. t = (time_t) 1000000000;
10. printf (“%d, %s”, (int) t, asctime (gmtime (&t)));
11. t = (time_t) (0x7FFFFFFF);
12. printf (“%d, %s”, (int) t, asctime (gmtime (&t)));
13. t++;
14. printf (“%d, %s”, (int) t, asctime (gmtime (&t)));
15. return 0;
16.}
இந்த புரோகிராமின் அவுட்புட்
1.1000000000, Sun Sep  9 01:46:40 2001
2.2147483647, Tue Jan 19 03:14:07 2038
3.2147483648, Fri Dec 13 20:45:52 1901
என அமையும்.
இந்த பிரச்னையை சாப்ட்வேர் கட்டமைப்பைத் திருத்துவதன் மூலம் தீர்த்துவிடலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.  பழைய Y2K  பிரச்னை போல பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிலர், ஐ.பி.எம். வகை பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னை 2016 ஆம் ஆண்டிலேயே வரும் எனக் கணித்துள்ளனர்.  ஏனென்றால் இந்த வகைக் கம்ப்யூட்டர்களில் நேரமானது ஜனவரி 1,1980 எனத் தொடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் கம்ப்யூட்டர்களைத் தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருகிறோம்.
விண்டோஸ் என்.டி. சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னை இப்போதைக்கு இல்லை. ஏனென்றால் அவற்றில் நேரத்தைக் கணக்கிட 64 பிட் இன்டிஜர் அடிப்படையாக உள்ளது. மேலும் அதன் கணக்கீடு 100 நானோ நொடிகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் நேரம் ஜனவரி 1, 1601 என்பதால், 2184ல் தான் என்.டி. சிஸ்டங்களில் இந்த பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.   இந்த பிரச்னை குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறுகையில் தன் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னைக்கு இடம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு உள்ள நிலையில், கணக்கீட்டின் அடிப்படையில், மேக் கம்ப்யூட்டர்களில் இந்த பிரச்னை 29,940 ஆம் ஆண்டில் தான் ஏற்படுமாம்.