மாஸ்கோ: ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களின் அவரது அரச வம்சத்தினை சார் என அழைப்பர். ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்ட போது சைபீரியாவும் ரஷ்யாவிற்கு கட்டுப்பட்டிருந்தது. சைபீரியாவில் அப்போதைய ராணுவ அட்மிரலாக இருந்த அலெக்ஸாண்டர்கோல்சோக் என்பவர் ரஷ்யாவிற்கு எதிராக உள்நாட்டு போரை அறிவித்தார்.ரஷ்யாவில் உள்நாட்டு குழப்பத்தினால் அந்நாட்டின் கடைசி சார் மன்னரிடமிருந்த பல ஆயிரம் கோடி மதிப்பிலான 16,00 டன் தங்கப்புதையலை கைப்பற்றி சைபீரியாவில் உள்ள உலகின் ஆழமான ஏரி என அழைக்கப்படும் பைகால் ஏரியில் மறைத்து வைத்திருந்ததாகவும் ரஷ்யாவின் மிர்-2 என்ற நீர்முழ்கிக்கப்பல் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் இத்தகைய தங்கப்புதையலை கண்டுபிடித்தனர். கண்டெடுக்கப்பட்ட தங்கப்புதையலை ஏரியின் பராமரிப்புப்பணிக்கு செலவிடப்படும் என சைபீரியா அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment