* மனம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் அடக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் உயர்ந்தவர்களால் மதிக்கப்படுவர். அடக்கவுணர்வு அற்றவர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாவர்.
* வரம்பு மீறி துன்பப்படுத்தினாலும் அதைப் பொறுமையோடு சகித்துக் கொள்வது சிறந்ததாகும். துன்பம் தருபவரின் செயலை மன்னித்து மறந்து விடுவது அதை விடவும் சிறந்தது.
* பிறரது வளர்ச்சியைக் கண்டு மகிழ்வது நல்ல குணமாகும். அதைவிட்டுவிட்டு ஒருவர் மீது பொறாமை கொள்வது தர்மத்தைப் புறக்கணிப்பதற்குச் சமமாகும்.
* அறத்தைக் கூட விட்டுவிட்டு அதர்மவழிகளில் செல்பவனாக இருந்தாலும் கூட, பிறரைப் பற்றி பொல்லாங்கு கூறாமல் இருக்கக் கடைபிடித்தல் வேண்டும்.
* பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்திக் கூறுபவர்கள், தன் பிழைகளையும், குற்றங்களையும் கண்டு திருத்திக் கொள்ளப் பழகினால் உலகில் யாருக்கும் துன்பமில்லை.
* தெளிவற்ற அறிவுள்ளவர்களே பயனில்லாத சொற்களைப் பேசுவார்கள். பயனற்ற பேச்சு ஒருவருடைய பெருமைக்கு இழுக்கை உண்டாக்கும்.
* வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும், பிறருக்கு மகிழ்ச்சியைத் தருவதுமான இனிய சொற்களைப் பேசுவதே உயர்ந்தவர்களின் பண்பாகும்.
* மறந்தும்கூட பிறருக்கு கேடு நினைக்காதீர்கள். அப்படி எண்ணினால் அறக்கடவுள் (தர்மதேவதை) கேடு எண்ணியவனுக்கு கேட்டினை விளைவிப்பார்