Tuesday, February 22, 2011

தெளிவூட்டுகிறார் திருவள்ளுவர்

தெளிவூட்டுகிறார் திருவள்ளுவர்

தெளிவூட்டுகிறார் திருவள்ளுவர்

* 
மனம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் அடக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் உயர்ந்தவர்களால் மதிக்கப்படுவர். அடக்கவுணர்வு அற்றவர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாவர்.
*
வரம்பு மீறி துன்பப்படுத்தினாலும் அதைப் பொறுமையோடு சகித்துக் கொள்வது சிறந்ததாகும். துன்பம் தருபவரின் செயலை மன்னித்து மறந்து விடுவது அதை விடவும் சிறந்தது.
*
பிறரது வளர்ச்சியைக் கண்டு மகிழ்வது நல்ல குணமாகும். அதைவிட்டுவிட்டு ஒருவர் மீது பொறாமை கொள்வது தர்மத்தைப் புறக்கணிப்பதற்குச் சமமாகும்.
*
அறத்தைக் கூட விட்டுவிட்டு அதர்மவழிகளில் செல்பவனாக இருந்தாலும் கூட, பிறரைப் பற்றி பொல்லாங்கு கூறாமல் இருக்கக் கடைபிடித்தல் வேண்டும்.
*
பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்திக் கூறுபவர்கள், தன் பிழைகளையும், குற்றங்களையும் கண்டு திருத்திக் கொள்ளப் பழகினால் உலகில் யாருக்கும் துன்பமில்லை.
*
தெளிவற்ற அறிவுள்ளவர்களே பயனில்லாத சொற்களைப் பேசுவார்கள். பயனற்ற பேச்சு ஒருவருடைய பெருமைக்கு இழுக்கை உண்டாக்கும்.
*
வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும், பிறருக்கு மகிழ்ச்சியைத் தருவதுமான இனிய சொற்களைப் பேசுவதே உயர்ந்தவர்களின் பண்பாகும்.
*
மறந்தும்கூட பிறருக்கு கேடு நினைக்காதீர்கள். அப்படி எண்ணினால் அறக்கடவுள் (தர்மதேவதை) கேடு எண்ணியவனுக்கு கேட்டினை விளைவிப்பார்

இலங்கை அரசின் சர்வாதிகார போக்கு!! திருப்பி அனுப்பபட்டார் திருமாவளவன்!


 

    


 


 


 


இலங்கை, பிப்.22:

பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்ற திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டார். நேற்று முன்தினம் பிப்.20ம் தேதி மரணமடைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதன்படி இலங்கை சென்ற அவரை இலங்கை அதிகாரிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க வில்லை. வேறு வழியின்றி அவர் தான் சென்ற விமானத்திலேயே மீண்டும் சென்னைக்குத் திரும்பினார்.

சிந்திக்கவும்:

இறுதி சடங்குக்கு போக அனுமதி மறுத்ததன் மூலம் இலங்கை தனது பாசிச பயங்கரவாத சிந்தனையை மீண்டும் உலகுக்கு எடுத்துக் காட்டி உள்ளது. இறுதி ஊர்வலங்களில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது உலக நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒன்று தான். தொல். திருமாவளவனை தடுத்தான் மூலம் இலங்கை அரசு தனது சர்வாதிகார, பயங்கரவாத முகத்தை உலகிற்கு மீண்டும் அடையாளம் காட்டி உள்ளது. இலங்கையில் மக்களாட்சி நடக்கவில்லை சர்வாதிகாரி, பயங்கரவாதி அதிபராக இருக்கிறார் என்பதை இந்த நிகழ்வு தெளிவு படுத்தி உள்ளது.